Skip to content

2021-2025ல் பிரதமர் மோடியின் வௌிநாடு பயணத்திற்கு ரூ.462 கோடி செலவு

 பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்களுக்கு 2021 -25 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரை சுமார் ரூ.462 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு மட்டும் ரூ.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக சராசரியாக ஆண்டுக்கு ரூ.115 கோடி செலவிடப்படுகிறது என்றும் கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு மட்டும் ரூ.420 கோடி செலவு என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

2021 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில் சுமார் 43 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தலா நான்கு முறை சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு மூன்று முறையும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டு முறையும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சென்ற செலவு விவரங்களின் அடிப்படையில், 2025ல் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றதற்கு அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் பயணத்துக்கு மட்டும் ரூ.25 கோடிக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இரண்டாவது மிகவும் விலை உயர்ந்த பயணம் ஜூன் 2023ல் அமெரிக்கப் பயணமாகும். இதற்காக ரூ.22.8 கோடி செலவிடப்பட்டது. மூன்றாவது அதிகபட்ச செலவு செப்டம்பர் 2021ல் அமெரிக்க பயணத்தின் போது பதிவு செய்யப்பட்டது, இதற்காக ரூ.19.6 கோடி செலவிடப்பட்டது.

error: Content is protected !!