Skip to content

நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அனந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சக்திபிரியா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்திபிரியா பிரிந்து சென்ற நிலையில், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்தார்.

சக்திபிரியா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 28-ம் தேதி மன்னார்குடியில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. வளைகாப்பு முடிந்த கையோடு கணவர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சக்திபிரியா, வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த திட்டச்சேரி போலீசார், உடலைக் கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமான ஓராண்டிலேயே இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், வருவாய் கோட்டாட்சியர் (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக சக்திபிரியாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!