திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மகளிர் உரிமை தேவை ஐந்தாயிரம் பெற்றது மகிழ்ச்சியும் தமிழக முதல்வருக்கு இனிப்புகள் ஊட்டி சிறப்பாக வரவேற்பு அளித்த திருப்பத்தூர் பொதுமக்கள்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்தடைந்துள்ளார். அவரை வரவேற்கும் விதமாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு, அமைச்சர் காந்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் நகரில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் முதலமைச்சர் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் 4.30 மணி அளவில் திருப்பத்தூர் நகரத்தில் நகரத்திலிருந்து ரோடு ஷோ மூலம் மாநாட்டிற்கு செல்கிறார். அதன் பின்பாக சாலை மார்க்கமாக செல்லும்போது மக்களை சந்தித்து கை அசைத்தபடி மாநாட்டு திடலுக்கு மாலை நேரத்தில் சென்றடைந்து அங்கு கூடியிருக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பேச உள்ளார். மாநாட்டில் அனைவருக்கும் உணவு ஏற்படும் மற்றும் ஸ்னாக்ஸ் தயார் நிலையில் உள்ளது

