Skip to content

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- குவியும் வாழ்த்துக்கள்

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சுந்தரமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ரோஷினி, தனது திருமணம் குறித்து எந்தத் தகவலையும் அதிகாரப்பூர்வமாகப் பகிராமல் ரகசியம் காத்தார். இருப்பினும், இந்தச் செய்தி அவர் நடித்த “பாரதி கண்ணம்மா” சீரியல் குழுவினர் மூலம் வெளியாகிவிட்டது. குறிப்பாக அந்த தொடரில் வில்லி வெண்பாவாக நடித்த ஃபரினா ஆசாத், திருமண நிகழ்வின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தியை ரோஷினி ஹரிப்ரியன் கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடந்தது.சுந்தர மூர்த்தி, ‘பொம்மை நாயகி’, ஐரா, தண்டட்டி, டென் ஹவர்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சீரியலில் இருந்து சினிமாவுக்கும் முயற்சி செய்து வரும் ரோஷினி கருடன், தலைவன் தலைவி, மெட்ராஸ் மேட்னி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!