Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசுகையில்; கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ ஆதாரத்துடன் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மீது அவதூறாக பேசுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!