மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நிதூர் போலீசார் கதவை உடைத்து அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு 24 வயது பெண் ஒருவர் படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டதற்கான காயங்களும் இருந்தது. மேலும் அவர் இறந்து பல நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தனது மகளை காணவில்லை என ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அவர் கொடுத்த அடையாளங்களுடன் போலீசார் ஒப்பிட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது அந்த பெண் தான் என்று கண்டுபிடித்தனர்.
இதற்கிடையில் அந்த பெண் உடல் மீட்கப்பட்ட வீட்டை பியூஷ் தம்னோடியா என்பவர் வாடகைக்கு பெற்றது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் ஒரு தொழில் அதிபரின் மகன் என்றும் கொலை செய்யப்பட பெண்ணின் காதலன் எனவும் தெரிய வந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் பியூஷ் தம்மோடியா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட இளம்பெண்னும் பியூஷ் தம்னோடியாவும் அப்பகுதி கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வந்தனர். இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் காதலி வேறு ஆண்களுடன் பேசுவதாக பியூஷ் தம்னோடியா சந்தேகப்பட்டார். இதனால் அவர்களிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் உண்டானது.
சம்பவத்தன்று இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை பேசி தீர்க்க வாடகை வீட்டில் சந்தித்தனர். அப்போது காதலன் இளம்பெண்ணை உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார். அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி மறுத்து விட்டார்.
உடனே அவரை தாக்கினார். பின்னர் வலுக்கட்டாயமாக அவருடன் உல்லாசமாக இருந்தார். பிறகு அவரது கை கால்களை கயிற்றால் கட்டி, கண்களையும் கட்டி தாக்கினார். இளம்பெண் அவனிடம் இருந்து தப்பிக்க போராடினார். எனினும் விடாமல் பியூஷ் தம்னோடியா அவரது வாயில் துணியை திணித்து கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.
அதன்பிறகும் ஆத்திரம் தீராமல் வெளியே சென்று மதுவாங்கி வந்து அவருடைய உடலுக்கு அருகில் குடித்தான். பின்னர் சிறுது நேரம் அந்த வீட்டில் இருந்து வீட்டு இந்தூரிலிருந்து தப்பி மும்பைக்கு சென்று பொயூஷ் தம்னோடியா அங்கு ஒரு ஓட்டலில் இரவு தங்கினார். அப்போது கொலை செய்யப்பட்ட காதலியின் ஆவியை வரவழைக்க மாந்தீரிக பூஜை செய்துள்ளார்.
இதற்காக யூடியூபில் ஆவிகளுடன் பேசுவது குறித்து தகவல்களை சேகரித்து குங்குமம், மஞ்சள், வளையல்கள் மற்றும் அழுகுசாதன பொருட்களை வாங்கி பூஜை செய்துள்ளார். அதன்பின் மும்பையில் உள்ளூர் ரெயில்கள் பயணம் செய்து பொழுதை போக்கியுள்ளார்.
அவர் கொலை செய்து விட்டு தப்பித்தபோது அந்த பெண்ணின் மொபைல் போனையும் எடுத்து சென்ற பியூஷ் தம்னோடியா அதில் இடம்பெற்றிருந்த பதிவுகளை மும்பையில் வைத்து அழித்துள்ளார்.
பியூஷ் தம்னோடியாவுக்கு தனது காதலி வேறு நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அதுபற்றி பேச வேண்டும் என்று காதலியை அழைத்துள்ளார்.
உடனே அந்த பெண் வீட்டில் பொய் சொல்லிவிட்டு காதலனை சந்தித்தாள்.
பின்னர் தங்கைக்கு போன் செய்து தனது வகுப்பு தோழர் பியூஷ் தம்னோடியுடன் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதாகவும் இரவு 11 மணிக்கு திரும்பி வருவதாகவும் கூறினார். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு அவருடைய செல்போனில் இருந்து அப்பாவிடம் அவர் வீடு திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள் என்று தகவல் வந்தது.
சிறுது நேரத்திலேயே செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. போலீசார் செல்போன் பதிவுகள், உரையாடல்களை வைத்து பியூஷ் தம்னோடியாதான் கொலையாளி என்பதை கண்டறிந்தனர். அவரை மும்பையில் ரெயிலில் வைத்து மடக்கி பிடித்தனர்.
கைதான பியூஷ் தம்னோடியா கொலை செய்வதற்கு முன்பு பாலியல் உணர்வை அதிகரிக்கும் மருந்தை தின்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். போதை மருந்து தலைக்கு ஏறியதால் காமுகனாக மாறி காதலியுடன் வெகு நேரம் உல்லாசமாக இருந்து அவரை கொடூரமாக கொன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

