Skip to content

பஞ்சாப் திருமணத்தில் பணமழை: மணமகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய மணமகன்

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமணம் என்பது மாறுபடும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் தரப்பில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபடும். அந்த வகையில் பஞ்சாப்பில் திருமணத்தின்போது மணமகள் மீது பணநோட்டுகளை வீசி வரவேற்பது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. பணமழை பெய்வது போல் மணமகள் மீது மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.
அதாவது மணமகள் திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் மையப்பகுதியில் வந்து நிற்கிறார். அவர் அருகே மணமகன் நிற்கிறார். அவர் தான் வைத்திருக்கும் பேக்கில் இருக்கும் பணத்தை எடுத்து மணமகள் மீது அள்ளி வீசுகிறார். இந்த நோட்டுகள் மழை போல் மேலிருந்து கீழாக மணமகள் மீது விழுகிறது. பண மழையில் மணமகள் நனைகிறார். அதேபோல் மணமகனின் குடும்பத்தினரும் சுற்றி நின்று பணத்தை அள்ளி மணமகள் மீது வீசுகின்றனர். இதனைபார்த்து மணமகள் பூரித்துபோகிறார்.
மணமகள் நிற்கும் இடத்தை சுற்றிய தரை முழுவதும் ரூபாய் நோட்டுகள் நிரம்பி உள்ளன. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது பிப்ரவரி 14ல் பஞ்சாபின் தர்ன் தாரனில் நடந்த ஒரு திருமணத்தில், மணப்பெண் மீது ரூ.8.5 கோடி ரூபாய் நோட்டுகளை தூவி மணமகன் வரவேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி மணமகனின் சகோதரர் சகோதரர் சிக்கந்தர் சிங் கூறுகையில்,
திருமண விழாவில் மணமகள் மீது பணம் வீசியது உண்மை தான். ஆனால் அந்த தொகை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தான் மணப்பெண் மீது வீசப்பட்டது. என் சகோதரர் ஆஸ்திரேலியாவில் லாரி தொழில் செய்து வருகிறார் என்றார்.
அதேபோல் திருமண நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மேலாளர் கூறுகையில்,
விழாவில் ரூ.8.50 கோடி பயன்படுத்தப்படவில்லை. டாலர் நோட்டுகளையும் சேர்த்து மொத்தம் சுமார் 4 லட்சம் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் என பரவும் தகவல் பொய்யானது என்றார்.

error: Content is protected !!