Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை..

கோவை பன்னீர்மடை அருகே வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டில் ஏதாவது உணவு கிடைக்குமா என உள்ளே நுழைய முயன்றுள்ளது. அப்போது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் விளக்கை போட்டதும் காட்டு யானை விளக்கு வெளிச்சத்திற்கு பயந்து அப்படியே பின்னால் சென்று அருகில் இருந்த செடிகளை சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளது. இவை அனைத்தும் அவரது வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காட்டுயானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவது தொடர்ந்து வருவதாகவும், கோடைகாலம் வரவுள்ளதால் வனவிலங்குகளுக்கு வனப்பகுதிகளிலேயே உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!