எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றாக இணைவோம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி கமுதியில் பொதுக்கூட்டம் ஒன்று சசிகலா தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த அரசியல் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

