Skip to content

புதுகையில் இலவச மருத்துவ முகாம்.. மாணவர்கள் -ஆசிரியர்கள் பயன்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியும் தாரா மருத்தவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது. ஸ்ரீ வெங்டேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்
பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் முன்னிலை வகித்தார். தாரா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் தனசேகரன் மருத்துவ முகாமைத் துவக்கி வைத்து பேசினார். நிகழ்வில் ரோட்டரி மண்டல ஆளுனர் ராமையா, பேராசிரியர் கருப்பையா, மகாத்மா ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த முகாமில் மருத்துவர்கள் ராஷ்மி, கிஷோர் ராஜா, நவீன் செல்வம்,சினேகா, அரவிந்த், சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயனடைந்தார்கள்.

error: Content is protected !!