Skip to content

பொள்ளாச்சியில் நகராட்சி தலைவர் பிறந்தநாள் விழா..சிவாஜி பாடல் பாடிய ஆணையாளர்

கோவை,பொள்ளாச்சி நகராட்சியில் இன்று நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் சாதாரண நகர மன்ற கூட்டம் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதை அடுத்து நகர மன்ற தலைவர் இன்று பிறந்தநாள் என்பதால் நகராட்சி அலுவலக வளாகத்தில் திடீர் ஏற்பாடாக கேக் கொண்டுவரப்பட்டு அனைவரும் முன்னணியில் தலைவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் பின் அவர் கூறுகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி பகுதியில் மாபெரும் வெற்றி பெற்று செல்லும் பொழுது கவுன்சிலர்களுக்கு மாபெரும் விருந்து அளிப்பதாக தெரிவித்தார் இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் திடீரென மைக் வாங்கி 1982 ஆம் ஆண்டு சங்கிலி திரைப்படம் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் டி எம் சௌந்தரராஜன் பாடிய நமக்காக எல்லோரும் காக்க என்று பாடல் பாடி அசத்தினார் இதனால் கவுன்சிலர்கள் மகிழ்ச்சி அடைந்து கைதட்டி உற்சாகமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!