Skip to content

திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழா.. சீறிபாய்ந்த காளைகள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருதுவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை நாட்றம்பள்ளி தாசில்தார் காஞ்சனா துவக்கி வைத்தார்.

இதில் கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 250 காளைகள் போட்டியில் பங்கேற்றன. முன்னதாக போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு போட்டியில் பங்கேற்க செய்தனர்.

மேலும் அதிவேகத்தில், குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.55 ஆயிரம் என மொத்தம் 62 பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பார்வையாளர்கள் வந்திருந்தனர். மந்தையில் சீறிப்பாய்ந்த காளைகளை முட்டியதில் 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் விழாவில் காவல்துறை தீயணைப்பு துறை சுகாதாரத்துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!