Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணிப்பூர் மற்றும் அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்

மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.21 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.26 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.30 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

அசாமின் ஹைலகண்டி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 3.19 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 29 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

ஒரே நாளில் மணிப்பூர் மற்றும் அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!