பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ (Ring of Fire) பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமாகும். நிலத்தடித் தட்டுகளின் தொடர் நகர்வுகள் காரணமாகப் புவியியல் ரீதியாக மிகவும் உணர்திறன் மிக்கப் பகுதியாக இந்நாடு திகழ்கிறது.
இந்தோனேசியப் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள், கட்டடங்கள் மற்றும் வீடுகளை விட்டு அலறியடித்தபடி திறந்தவெளிகளுக்கும் வீதிகளுக்கும் ஓடி வந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்டச் சேத விவரங்கள் மற்றும் நில அதிர்வின் மையப்பகுதி குறித்துப் புவியியல் வல்லுநர்கள் மற்றும் அரசுத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
