கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ – 2-வது நாளாக தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறை வீரர்கள்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு வாங்கல் சாலையில் அரசு காலணி அருகே உள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு மலை

போல் காட்சிகளிக்கின்றன. இந்நிலையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ காற்றின் காரணமாக தீ மளமளவென பரவி எரிய துவங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர், புகலூர், திருச்சி, துறையூர் என 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனம் மற்றும் தனியார் லாரி மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வாங்கல் சாலை வழியாக நாமக்கல், சேலம் செல்லும் வாகன ஓட்டி

கள் புகைமூட்டம் காரணமாக மூக்கை மூடிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக இன்று தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து வருகின்றனர்.
குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதி மக்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு தீ பிடித்து எரிவது தொடர்கதையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

