Skip to content

அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக ராஜகோபுரம் இன்று பொதுமக்கள் நாளை மறுநாள் போராட்டம் நடத்துகின்றனர்.இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் ஆரிய வைசிய சத்திரத்தில் திருவரங்கம் அடிமனை பிரச்சினை சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி 2 -வது வார்டு கவுன்சிலர் ஜவகர் தலைமை தாங்கினார். திருவரங்கம் பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.ஒவ்வொருவரும் தங்களது அடி மனை பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கைகள் வைத்து பேசினர். கூட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகின்ற 26 – ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அனைத்து பொதுமக்கள் சார்பாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்களின் கூட்டமைப்பு தலைவர் எம். மாரி என்கிற பத்மநாபன் மற்றும் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!