Skip to content

துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அஜீத் சிங் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் தனது பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா நகரில் உள்ள எஸ்.ஐ.சி.ஓ.பி. பகுதியில் முதலில் அவர் சி.ஆர்.பி.எப். படைக்கான வாகன ஓட்டுநராக பணியில் அமர்த்தப்பட்டார்.

சி.ஆர்.பி.எப்.பின் 96 பட்டாலியன் பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிளான அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. பணி அழுத்தம் அல்லது குடும்ப சூழ்நிலையால் இந்த முடிவை எடுத்திருக்கிறாரா? என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!