Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது

திருநெல்வேலி, பேட்டை, கலுங்கடி தெருவை சேர்ந்த பெருமாள்(எ) மண்டையன் பெருமாள் மகன் லெட்சுமணன் (21) என்பவர், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் (மேற்கு), போலீஸ் உதவி கமிஷனர் இளவரசன் (டவுண் சரகம்), போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் (பேட்டை சட்டம் & ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி லெட்சுமணன் நேற்று குண்டாசின் கீழ் கைது செய்துபாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!