Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புது படம் 

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்துக்கு கெணத்த காணோம் என தலைப்பிட்டுள்ளனர். ஆர்.பி.டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தாயரித்துள்ள இந்த படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கெணத்த காணோம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வெளிப்படையான நகைச்சுவைக்கு பதிலாக சூழ்நிலை சார்ந்த, கதாபாத்திரம் சார்ந்த, வேடிக்கை நிறைந்த நாடகத்தை குறிக்கும் பழமையான அழகியலை முன்வைக்கிறது என்கிறது படக்குழு. இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

error: Content is protected !!