Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் மூலவர் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி கிருஷ்ணமூர்த்தி 1 வது வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஐயப்பன் திருகோவில். இக்கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.

மஹா கணபதி ஹோமத்துடன் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து முதற்கால வேல்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது.

இன்று நான்காம் கால வேள்வி நடைபெற்று புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முதலில் மூலவர் ஐயப்பனுக்கு புனித நீர் பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் கோபுர கலசங்கள் மற்றும் கோவிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மாலை சுவாமி பவனி வருதலைத் தொடந்து ஹரிவராசனம் பாடப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

error: Content is protected !!