ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரின் கால் துண்டாகி தண்டவாளத்தில் விழுந்த சோகம்: படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்கு அனுமதி.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை அரியலூர் ரயில் நிலையம் அருகே வ

ந்தபோது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த கரூரைச் சேர்ந்த ரேணு கோபால் (41) என்பவர் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் ரேணுகோபாலின் வலது கால் தனியே துண்டாகி தண்டவாளத்தில் கிடந்தது. அவரது மற்றொரு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயங்களுடன் கீழே விழுந்து கிடந்த ரேணுகோபாலை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ரேணுகோபால், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ரயிலில் பயணம் செய்த ரேணுகோபால் கழிவறை செல்லும் பொழுது கவன குறைவாக தவறி கீழே விழுந்தாரா? அல்லது படிக்கட்டில் அமர்ந்தவாறு வந்தபோது தவறி கீழே விழுந்தாரா? என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்பு பாதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

