கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து பறக்கை செல்லும் சாலையில் மர்ம நபர்கள் கழிவுகளைக் கொட்டி தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்து எரிந்த கழிவுகளிலிருந்து வெளியேறிய அடர்ந்த கரும்புகை சாலை முழுவதையும் சூழ்ந்ததால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கொட்டப்பட்டிருப்பது ஆபத்தான மருத்துவக் கழிவுகளா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
