Skip to content

செங்கிப்பட்டியில் மார்ச் 4ம் தேதி விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டு மனு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பரப்பரை மேற்கொண்டார். இதில் அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். இதற்காக வருகிற நான்காம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளதாகவும் எனவே இந்த கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். இந்த மனு குறித்து விசாரணை செய்து இன்று மாலை தகவல் சொல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!