Skip to content

சங்கராச்சாரியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 18ம் தேதி நடந்த மவுனி அமாவாசை மகா மேளாவின்போது புனித நீராடவிடாமல் தன்னை தடுத்ததாக உத்தரகாண்டில் உள்ள ஜோதிர்மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சர்ச்சையை எழுப்பினார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக மைனர் உட்பட இரண்டு பேரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் ஆகியோர் மீது பிரயாக்ராஜில் உள்ள ஜூன்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி சங்கராச்சாரியார் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வர இருந்தது. இது தொடர்பாக வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவிமுக்தேஷ்வரானந்த்,போக்சோ சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் உண்மை கண்டறிய முடியும் என்றால் அது கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். உண்மையை வெளிக்கொணருவதற்கு கிடைக்கக்கூடிய எந்த முறைகளையும் பின்பற்ற வேண்டும். பொய் நீண்ட காலம் நீடிக்காது. பொய்யான கதையை உருவாக்கியவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள். இந்த புனையப்பட்ட வழக்கு குறித்து மக்கள் அறிந்துகொள்ளும்போது உண்மை தெளிவாகி விடும்” என்றார்.

error: Content is protected !!