காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் இந்த அரசு எந்தவித சமரசமும் செய்யாது என சட்டப்பேரவையில் அ மைச்சர் ஆனந்த் பேசியுள்ளார்.
மேகதாது அணை திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார். நடுவர் மன்றம் அமைப்பதை சிலர் தவறு என்று கூறுகின்றனர். காவிரி பிரச்சனையில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. மேகதாது தொடர்பான தீர்மான நகல் அன்றைய தினமே பிரதமருக்கு அனுப்பப்பட்டது. டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மேகதாது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது
