Skip to content

முதல்வர் பிறந்தநாள்.. திமுக மேற்கு சார்பில் நலத்திட்ட உதவி..உணவு வழங்கல்

கோவை அப்பநாயக்கன்பாளையம் அருகே கலைஞர் நகர் மற்றும் துடியலூர் அண்ணா நகர் பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக துடியலூர் மேற்கு பகுதி வட்டம் 1 மற்றும் வட்டம் 1 அ சார்பில் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நோட்புக், பேனா, ஸ்கேல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர். இந்நிகழ்வில் அண்ணா நகர் பகுதியில் ஒரு பெண் குழந்தைக்கு மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் இனியால் என பெயர் சூட்டினார்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடிவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திமுக துடியலூர் மேற்கு பகுதி வட்டம் 1 மற்றும் வட்டம் 1 அ சார்பில் கோவை அப்பநாயக்கன்பாளையம் கலைஞர் நகர் பகுதியில் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வட்ட கழக பொறுப்பாளர்கள் சம்பத்குமார் மற்றும் சேது ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோட்புக், பேனா, ஸ்கேல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவும் வழங்கினர்.

அதேபோல் துடியலூர் அண்ணா நகர் பகுதியிலும் குழந்தைகளுக்கு நோட்புக், பேனா, ஸ்கேல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர். இந்நிகழ்வில் அண்ணா நகர் பகுதியில் ஒரு பெண் குழந்தைக்கு மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் இனியால் என பெயர் சூட்டினார்.

மேலும் அண்ணா காலனி பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒவ்வொரு வீடுகளிலும் கோலங்களை வரைந்திருந்தனர். அவைகளை பார்வையிட்ட மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் சிறந்த கோலங்களுக்கான பரிசு கூப்பன்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி கழக பொறுப்பாளர் இராஜசேகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், பகுதி பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராக்கிமுத்து, வெங்கடேஷ், சின்னு, ராஜ்கண்ணன், ஜெயகுமார், வட்ட கழக பொறுப்பாளர்கள் ஈஸ்வரன், மாதேஸ்வாமி, வட்ட கழக நிர்வாகிகள் தங்கராஜ், மாயவன், கார்த்தி, காளீஸ்வரன், அருண்குமார், முத்து, பெருமாள், அர்ஜுனன், ராமலிங்கம், சாம்ராஜ், சின்னச்சாமி, இளைஞர் அணி நிதியரசு, ஹரி, சிவதர்ஷன், சுபாஷ், மதன், தினேஷ், கருப்புசாமி, பி எல் ஏ 2 நிர்வாகிகள் சாந்தி, பூங்கொடி, உதயகுமார், செல்வி, தாரணி, பாப்பம்மாள், வசந்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!