பள்ளப்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் 6-அடி நீளம் உள்ள மஞ்சள் நிற சாரைப்பாம்பு பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்ட பாம்பு பிடி வீரர்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஜாமியா நகர் பகுதியில் வீட்டின் ஓரத்தில் 6-அடி நீளம் உள்ள மஞ்சள் சாரை பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் மன்சூர் என்பவருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர், பாம்பு பிடிக்கும் கருவி மூலம் வீட்டின் ஓரத்தில் இருந்த மஞ்சள் சாரை பாம்பை பத்திரமாக மீட்டு சாக்கு பையில் அடைத்து காட்டு பகுதியில் பத்திரமாக விட்டனர்.
இதனால் பள்ளப்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

