Skip to content

ஒரே காரில், ஒரே நிறத்தில் உடையணிந்து ஜோடியாக வந்த விஜய்- த்ரிஷா

சென்னையில் நடைபெற்று வரும் திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக கலந்துகொண்டார்.

Image

தமிழ்நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.  இதில் கல்பாத்தி சகோதரர்கள் எஸ்.அகோரம், எஸ் .கணேஷ், எஸ்.சுரேஷ் ஆகியோர் இந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ் சினிமாவில் பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடிகை த்ரிஷாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதற்கு முன்பாக இருவரும் ஒன்றாக திருமண விழாவில் பங்கேற்றது கிடையாது. விஜய் சங்கீதா விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு விஜய் கலந்து கொள்ளும் முதல் திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!