சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “‘உங்களில் ஒருவன் நான்’ என உரக்கச் சொல்லி, மக்களோடு மக்களாகப் பயணித்து, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராகத் திகழ்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இன்றைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் பொருளாதாரமாக, 11.19% வளர்ச்சியுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் காரணம்!”, இவ்வாறு தெரிவித்தார்.

