இயக்குனர் த.செ.ஞானவேல் தான் எழுதிய ‘மைல்கல்” புத்தகத்தை நடிகர் சூர்யாவுக்கு பரிசளித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்தின் இயக்குநரான த.செ.ஞானவேல், சமீபத்தில் சூர்யாவை சந்தித்து தனது புதிய நாலை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்பு, அவர் நடிகர் ரஜினிகாந்தையும் நேரில் சந்தித்து ‘மைல்கல்’ புத்தகத்தை வழங்கியிருந்தார்.
இயக்குநர் த.செ.ஞானவேல் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். ‘மைல்கல்’ மட்டுமின்றி, *தமிழ் மண்ணே வணக்கம்’, ‘சொல்லாததும் உண்மை’, ‘திருப்புமுனை’ போன்ற நூல்களையும் அவர் எழுதியுள்ளார். சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு படங்களை உருவாக்குவதில் தனித்துவம் கொண்ட இயக்குநராக த.செ.ஞானவேல் அறியப்படுகிறார். அவரின் ‘ஜெய்பீம்’ திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
