Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேளச்சேரி-பரங்கிமலை ரயில் சேவை நாளை தொடங்காது

சென்னை வேளச்சேரி- பரங்கிமலை MRTS ரயில் சேவை திட்டமிட்டபடி நாளை தொடங்காது.

வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை 10ம் தேதி – (நாளை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்தாம் தேதி நடந்த சோதனை ஓட்டத்தை பார்வையிட்ட ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கார்க், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மார்ச் 10ஆம் தேதி சேவை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்ட நிலையில், சமீபத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய சோதனையில், சில மாற்றங்கள் செய்யக் கூறியதால் இந்த காலதாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!