Skip to content

இன்றைய தங்கம் விலை நிலவரம்

நடப்பாண்டு தொடங்கியது முதலாகவே, தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதன்முறையாக மார்ச் 1 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, படிப்படியாகக் குறைந்து வந்த தங்கம் விலை, நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்பட்டு வந்தது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும் விற்பனையானது.
நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050-க்கும் விற்பனையானது
சென்னையில் இன்று (மார்ச் 11) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.15,120க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!