2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் காங்கிரஸ் (28), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2) உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெற்று, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது திமுக கூட்டணியில் மதிமுக, 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.

