கரூர் அருகே நள்ளிரவில் இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம்: இரண்டு சிறுவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை .
கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த விஜயபுரம் கிராமத்தை சார்ந்தவர் கவின் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய போது, முன்பகை காரணமாக அதே கிராமத்தை சார்ந்த இரண்டு சிறார்கள் கவின் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கவின் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து சென்று ஒரே ஊரில் வசித்து வரும் இரண்டு சிறார்களை வெட்ட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, அவர்கள் இருவரும் அந்த அரிவாளை கவினிடமிருந்து பிடுங்கி அவரது தலை, முகம், கழுத்து பகுதியில் வெட்டியதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து இரண்டு சிறார்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து.
தப்பியோடிய இரண்டு சிறார்களிடமும் வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்.

