Skip to content

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்… கோலாகலம்

கோவை, பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்
மிகவும் பிரசித்தி பெற்றதாகும் பொள்ளாச்சி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் தேர் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்தாண்டு திருவிழா கடந்த 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது
அதனைத் தொடர்ந்து கடந்த 24 ம் செவ்வாய்க்கிழமை கம்பம் நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அம்மனுக்கு வேண்டுதல் வைத்து பூவோடு எடுத்து வந்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான 21 அடி வெள்ளித்தேரில் சிவப்பு நிற பட்டடுத்தி காட்சி தந்த மாரியம்மன்ன விநாயகர் தேர் முன்னே செல்ல நாதஸ்வரம் மேளத்தளம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

error: Content is protected !!