Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை

கரூர், முனியப்பன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு 50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள் இன்றி கொண்டுவரும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வேலுச்சாமிபுரம், முனியப்பன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாந்தி தலைமையில் கரூர் நகர துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் இணைந்து வாகன சோதனையில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சோதனை செய்தனர்.

error: Content is protected !!