Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீவிர வாகன சோதனையில் ரூ. 2.59 லட்சம் பறிமுதல்.. திருச்சியில் அதிரடி

தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே ரூ. 50 ஆயிரத்துக்கு மேல்
உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் இன்று திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படைப் பிரிவைச் சேர்ந்த சுதர்சன் தலைமையிலான குழு இன்று அதிகாலை அசூர் கட் ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கன்னியாகுமரி மாவட்டம் தோவாழை வட்டம்,மாதவிளாயம், கண்ணன்புதூர் என்ற முகவரியை சேர்ந்த ஜெனிஷ் என்பவரிடமிருந்து ரூ
59,000( ஐம்பத்து ஒன்பதாயிரம்) கைப்பறப்பட்டது. இதேபோன்று திருவெறும்பூர் பறக்கும்படைப் பி.பிரிவைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவரின் தலைமையிலான குழு பெரிய சூரியூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில், திருவெறும்பூர் வட்டம் காட்டூர் மஞ்சத்திடல் பிரியங்கா நகர் விஸ்தரிப்பு, எண் 1, மஹாலக்ஷ்மி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த காரில் இருந்து ரூ. 2 இலட்சம் கைப்பறப்பட்டது. பின்னர் மேற்கண்ட இரு வேறு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட தொகையினை திருவெறும்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைத்தனர். இது பற்றி தேர்தல் அதிகாரி கூறும்போது, உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் இந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் கைப்பற்றப்பட்ட தொகை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

error: Content is protected !!