Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் ரூ.800 கோடி சொத்துக்களை ஏமாற்றிய அதிமுக பிரமுகர்

சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றி போலி ஆவணம் தயாரித்து 800 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்த செந்தில் என்று கேபிள் செந்திலை காவல்துறையினர் இன்று காலை கைது செய்ய சென்ற நிலையில் வீட்டிலிருந்து வெளியில் வர மறுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கேபிள் செந்தில் வீட்டிற்குள் இருந்த படி ஜன்னல் வழியாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தஞ்சை சிராஜ்பூர் நகரில் வசித்து வருபவர் செந்தில் என்கிற கேபிள் செந்தில். இவர் 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட முகமது பேகம் என்பவரது சொத்து

க்களை போலி ஆவணம் தயாரித்து நிலங்களை மனை போட்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் தெரிய வந்து முகமதா பேகம் தஞ்சை மாவட்ட டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் கேபிள் செந்தில் அவரது மனைவி உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கேபிள் செந்தில் முன் ஜாமின் பெற்றிருந்தார் .

இந்த நிலையில் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவரை கைது

செய்ய காவல்துறையினர் இன்று அவரது வீட்டிற்கு சென்றனர்.

இதனை அறிந்த கேபிள் செந்தில் வீட்டிலிருந்து வெளியே வர மறுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வீட்டில் இருந்தபடியே ஜன்னல் வழியாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

தன்னை டிசிபி இன்ஸ்பெக்டர் ரவிமதி மிரட்டி வருவதாகவும் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முடியவில்லை எனக்கூறினார்..

error: Content is protected !!