Skip to content

ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக தினந்தோறும் 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றது.

தினந்தோறும் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில் கரூர் டெக்ஸ்டைல்ஸ், அரசு, தனியார் அலுவர்கள் மற்றும் இதர வேலைக்கு செல்பவர்கள் என 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த தினசரி பயணிகள் ரயிலை பயன்படுத்தி வந்தனர்.

மாதாந்திர பாஸ் எடுப்பதன் மூலம் தங்களுக்கு செலவினம் குறையும் என்ற நோக்கில் இந்த ரயில் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தினந்தோறும் காலை 8 மணிக்கு குளித்தலை ரயில் நிலையத்தை வதடையும் ரயில் மூலம் 9 மணிக்கு கரூரை சென்றடைந்து அங்கிருந்து தாங்கள்

வேலை பார்க்கும் அலுவலகங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் இவ்வழியாக இயக்கப்பட்ட பின்னர் பயணிகள் ரயிலின் நேரம் மாற்றப்பட்டது.

8 மணிக்கு வந்த ரயில் ஆனது 8. 40 மணிக்கு மேல் குளித்தலை ரயில் நிலையத்திற்கு தினந்தோறும்

வருகிறது. மேலும் இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்தை சென்று அடைவதற்கு முன்னர் இரண்டு மூன்று இடங்களில் கிராசிங்க்காக நிறுத்தப்படுவதால் 10:30 மணிக்கு தான் கரூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

இதனால் கரூர் ரயில் நிலையத்திலிருந்து தாங்கள் வேலை பார்க்கும் டெக்ஸ்டைல் கம்பெனிகளுக்கு செல்வதற்கு மிகவும் தாமதமாவதால் சம்பளம் பிடித்தும் செய்யப்படுவதாகவும், இது குறித்து பலமுறை ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்து எந்தவித நடவடிக்கை

மேற்கொள்ளதால் தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறி இன்று காலை குளித்தலை ரயில் நிலையத்தில் கரூர் திருச்சி பயணிகள் ரயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இது குறித்து மனுவாக அளியுங்கள் ரயில்வே துறை அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து உங்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தருவதாக உறுதி அளித்த பின்னர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சுமார் 25 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த ரயில் மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!