Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேரில் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி,

இதுவரை தமிழகத்தில் 2.67 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது.மீதன் 1.50 லட்சம் இணைப்புகள் இணைக்க வேண்டிய உள்ளது .இன்று மாலையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைகிறது ஏற்கனவே பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல் தரப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே இன்று மாலைக்குள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

குறுகிய காலத்தில் 2.67 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது எனவே ஆன்லைன் பலியான மின் சேவைகளுக்கான பயன்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது.

சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!