Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

ஈசநத்தம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பணம் பறிமுதல்.

கரூர் மாவட்டம், ஈசநத்தம் முருங்கை சந்தை அருகில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஈசநத்தத்திலிருந்து கரூர் நோக்கி சென்ற TN 47 BU 5926 என்ற எண் கொண்ட Honda Shine இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தரகம்பட்டியை சேர்ந்த தசரவணக்குமார், வயது 26 என்பவரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.2,00,000/- (ரூபாய் வைத்திருப்பது கண்டறியப்பட்டு பின்னர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அரவக்குறிச்சி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!