Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவிற்காக உயிரை கொடுத்து பணியாற்றுவேன்-திவ்யா சத்யராஜ்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக ,கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,மமக, மக்கள் நீதி மய்யம் ,கொங்கு மக்கள் தேசிய கட்சி, கொங்கு பேரவை ,முக்குலத்தோர் புலிகள் படை என இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமுகமான நிலையில் எட்டப்படாத நிலையில்,வேல்முருகனின் தவாக கூட்டணியில் இருந்து விலகி சென்றது.

இதற்கிடையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.மேலும், விண்ணப்பப் படிவத்தை பெற ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது தொகுதியில் போட்டியிட ரூ.25,000 மற்றும் மகளிர் அல்லது ஒதுக்கப்பட்ட (தனி) தொகுதிகளில் போட்டியிட ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்து இருந்த நிலையில்,முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திவ்யா பேசுகையில்,இது தன்னுடைய முதல் நேர்காணல். இங்கு அனைவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

error: Content is protected !!