Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர் திடீர் சாவு

திருச்சி வடக்கு தாரா நல்லூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் சதீஷ் குமார் ( 45 ) இவர் தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்தனர் தொடர்ந்து தேவிகா மற்றொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். சதீஷ்குமார் மூச்சுத் திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர். இதனால் நேற்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார் இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்து மூதாட்டி பலி..

திருச்சி தாராநல்லூர் வசந்த் நகரை சேர்ந்தவர் மல்லேஸ்வரி (72). இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தன் மகள் வீட்டில் வசித்து வந்தார் மேலும் அவர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் இந்த நிலையில் அவரது மகள் மல்லேஸ்வரியை திருச்சிக்கு அவரது மகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இங்கு வந்த மல்லேஸ்வரிக்கு தன் மகன் வீட்டிற்கு வழி தெரியாமல் உறையூர் வெக்காளியமமன் கோயில் அருகே உட்கார்ந்து இருந்தார் அங்கு அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரது பையில் இருந்த செல்போனில் இருந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது பேரன் வந்து அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மல்லேஸ்வரி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!