Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

”யூத்” படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்

கருணாஸ், பாடகி கிரேஸ் தம்பதியின் மகன் கென் கருணாஸ் நடித்து இயக்கியுள்ள படம், `யூத்’. தமிழில்  வெளியாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு டப்பிங்  ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கென் கருணாஸ் பேசுகையில், ‘இப்போது ஒரு நடிகருக்கு ஆதரவு கிடைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. சென்னையில் இருந்து வந்திருக்கும் எங்களுக்கு ஐதராபாத்தில் ஆதரவு கொடுத்துள்ள அனைவருக்கும் நன்றி.

இப்படம் ஒரு மாணவனின் 10வது ரிசல்ட் நேரத்தில் ஆரம்பித்து, அவனது 12வது வகுப்பின்போது முடியும். இரண்டு வருடங்களில் அவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் கதை. டிரைலரை பார்த்த தனுஷ் சார், `இப்படத்தின் மூலம் இந்த சமூகத்துக்கு நீ என்ன சொல்ல விரும்புகிறாயோ, அது டிரைலரிலேயே புரிகிறது’ என்றார். அவர் நடித்த ‘வாத்தி’ படத்தில் நான் நடித்தேன். உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன். அப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி சாருக்கு நன்றி.

அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பல விஷயங்கள் எனக்கு பேருதவியாக இருந்தது. ‘ ‘யூத்’ படத்தை பலமுறை பார்த்துவிட்டேன். எனவே,  நான் பவன் கல்யாண் சாரின் படத்தைத்தான் பார்ப்பேன். உங்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும், ‘யூத்’ படத்தை ஜாலியாக பார்த்து ரசித்து சிரித்து மகிழலாம். படம் முடிந்த பிறகு உங்கள் அப்பா, அம்மாவை யோசித்து பார்ப்பீர்கள். எனக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் சம்பளம் வாங்காமல் இசை அமைத்துள்ளார்’ என்றார்.

error: Content is protected !!