Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இனி அனைத்து தேர்தல்களிலும் தவெக தான் வெல்லும்”- செங்கோட்டையன்

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 2 தொகுதிகளையும் அதிமுக இழந்துவிட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 தொகுதிகளையும் அதிமுக இழந்துவிட்டது. இனி அனைத்து தேர்தல்களிலும் தவெக தான் வெல்லும். மக்கள் தவெகவை அங்கீகரித்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தமிழ்நாட்டில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகம்தான் வெற்றி பெறும். அதற்கான நல்ல வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது. இந்த வெற்றி வரலாறு படைக்கும் வெற்றி. தவெக அரசின் நான்கு மாத ஆட்சியின் மூலம் இரண்டு தொகுதிகளில் கிடைத்த வெற்றி, மக்கள் கொடுத்த அங்கீகாரம். தலைவருக்குப் பின்னால் வரும்போது, அவருடைய பயணம், தமிழக மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்பதும், இந்தியாவில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதும்தான் அவருடைய கனவாக இருந்தது. அதன் அடிப்படையில் மக்கள் தீர்ப்பு வழங்குகிறார்கள்” என்றார்.

error: Content is protected !!