Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை.. எஸ்பி பாராட்டு

குளித்தலை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பான புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தவனக்காடு பகுதியில் 2020ஆம் ஆண்டு அன்பழகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குளித்தலை

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கதிரேசன், ராஜேஷ், குமார் மற்றும் வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் கரூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் கதிரேசன், ராஜேஷ், குமார் ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நான்காவது

குற்றவாளியான வினோத்திற்கு கரூர் கூடுதல் மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த ஆய்வாளர் செந்தில்குமார் (முன்னாள் லாலாபேட்டை காவல் நிலையம், தற்போது நடுக்காவேரி காவல் நிலையம், தஞ்சாவூர்), ஆய்வாளர் சதீஷ்குமார், காவலர் மதிவாணன் மற்றும் அரசு வழக்கறிஞரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.என். ஹரிகரன் பிரசாத் IPS நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

error: Content is protected !!