Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் சிக்கினர். விசாரணையில் அவர்கள் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் என்பது உறுதி செய்யப்பட்டது. கைதான ஆசிரியர்கள் கீர்த்தனா, காவ்யா மற்றும் நீஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ரகசிய ஆன்லைன் குழுக்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாகக் கொக்கைன் உள்ளிட்ட விலை உயர்ந்த போதைப் பொருள்களை ஆர்டர் பெற்று, குறிப்பிட்ட நபர்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளனர். இவர்களிடமிருந்து போதைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!