திருப்பூர், மங்கலம் அடுத்த வேட்டுவபாளையத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் இரண்டு பேருக்கு சொந்தமான வேஸ்ட் குடோன் தனித்தனியாக உள்ளது.
அந்த வேஸ்ட் குடோனில் நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் குடோனை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், நள்ளிரவில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள், தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
தொடர்ந்து தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்கள் 3 தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலானது.

