Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம்- ஓட்டல் அதரடி ஆஃபர்

ஓசூரில் உள்ள ஓட்டல் நிர்வாகம் ஒன்று வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, ஓசூரில் தளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் நிர்வாகமானது, தங்களது ஒட்டலுக்கு முன்பு ஆங்கிலத்தில் விளம்பர பலகை ஒன்று வைத்துள்ளது. அதில் வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்துக்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும், 2 வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்துக்கு தினமும் 2 சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“கஸ்டமர்கள் யாராவது தங்களிடம் உள்ள ஒரு கமர்ஷியல் சிலிண்டரை (Commercial Gas Cylinder) எங்களுக்கு தந்தால், அதற்கு பதிலாக அடுத்த ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சிலிண்டரின் விலைக்கு நிகரான அல்லது அதற்கும் மேலான மதிப்பிலான உணவை ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து வழங்க அந்த உணவகம் முன்வந்துள்ளது.
 

ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, தங்களது வணிக சிலிண்டர்களை 2 கஸ்டமர்கள் இந்த ஓட்டலில் ஒப்படைத்துவிட்டு, இந்த “பிரியாணி சந்தா” திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் தினமும் இந்த ஓட்டலுக்கு வந்து தங்களுக்குரிய சிக்கன் பிரியாணியை இலவசமாக சாப்பிட்டு செல்கிறார்களாம்.

காசு கொடுத்து சிலிண்டர் வாங்க காத்திருப்பதை விட, மக்களிடம் இருக்கும் உபரி சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உணவை வழங்குவது 2 தரப்புக்கும் லாபகரமாக இருக்கும் என்றும் ஹோட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!