Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

கணவனை காணவில்லை- காதல் மனைவி புகார்

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் தன் பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் விடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை .இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

பித்தளை பொருட்கள் திருடிய 2பேர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பித்தளை சாமான் கடை நடத்தி வருபவர் அய்யனார் (76). இப்பொழுது கடையில் குமார் என்ற வாலிபர் வேலை செய்து வருகிறார். கடைக்கு பித்தளை பொருட்கள் வாங்க நுகர்வோர் வந்திருந்தனர் .அப்போது பொருட்களை வாங்குவது போல நடித்து அவற்றை திருடி சென்றனர் .இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை கூனி பஜாரை சேர்ந்த ரவீந்திரன் ( 20 ) உள்பட இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர் சாவு

நாமக்கல் மாவட்டம் ஆர்.சி.புதூர் குட்டை தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (60). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆலயத்தில் உதவி செயல் பொறியாளராக வேலை செய்து வந்தார். இதய கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அவர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக சக அலுவலர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்

சுய தொழில் தொடங்க முடியாத மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை

திருச்சி உறையூர் குழுமணி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், தமிழரசி தம்பதி. இவர்களது மகன் சந்தோஷ் ( 25 ). சுயமாக தொழில் தொடங்க கடன் கேட்டு வந்தார். இந்த நிலையில் அவரது பெற்றோரிடம் ரூபாய் ஒரு லட்சம் தொழில் தொடங்கக் கடன் கேட்டார் அவர்கள் தர மறுத்ததாக தெரிகிறது இதனால் மன உளைச்சலில் சந்தோஷ் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பெண்ணிடம் நகை பணம் மோசடி -வாபரிடமும் மோசடி

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜான் ஹெலன் (49). இவர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திருச்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (37) என்பவருடன் நட்பு ஏற்பட்டது அப்போது தினேஷ் குமார் அவர் செய்யும் தொழிலில் பணம் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அவர் தினேஷ் குமாருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 2.2 லட்சம் பணம் மற்றும் ஏழரை பவுன் நகை கொடுத்தாள் அந்த பணத்தில் தினேஷ் பொன்னகரில் கணினி மையமும் பிராட்டியூரில் மளிகை கடையும் நடத்தி வந்தார் .வெகு நாட்கள் ஆகியும் தினேஷ் அவரிடம் வட்டிப் பணத்தை தரவில்லை அதோடு கொடுத்த அசலையும் திரும்பத் தரவில்லை .இதனால் தான் ஏமாற்றப்பட்டது குறித்துஜான் ஹெலன் தெரிந்து கொண்டார் இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் நகை பணத்தை ஏமாற்றிய தினேஷ்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

வாலிபரிடம் 10 லட்சம் மோசடி

திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசன் நகரை சேர்ந்தவர் அமனுல்லா (31). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் அதே வேளையில் பகுதிவாரியாக வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது அப்போது அவருக்கு வாட்ஸ் அப் செயலி வாயிலாக ஒரு எண்ணில் பகுதி வாரியாக வேலை இருப்பதாக தகவல் வந்தது அதை தொடர்ந்து அவர் அதில் பதிவு செய்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி அமனுல்லாவை அந்த பகுதிவாரியாக வேலை கொடுத்த நிறுவனத்தை சார்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு ரூபாய் ரூபாய் 10,95,000 முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வழி வகை செய்வதாக கூறினார் இதை நம்பி அமனுல்லாஹ் முதலீடு செய்தார். ஆனால் பணத்தை திரும்பி தராமல் அவர் ஏமாற்றியது தெரியவந்தது இதுகுறித்து மாநகர இணைய வழி குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளத்தனமாக மது விற்ற 3 பேர் கைது..மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு ரயில்வே தண்டவாளம் அருகே சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை நடப்பதாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து போலீசார் அங்கு கள்ளத்தனமாக மது விற்ற ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகரை சேர்ந்த உப்பு மாலிக் (27)என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்அவரிடம் இருந்து 282 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல இபி ரோடு அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த தாராநல்லூர் செக்கடி பஜாரை சேர்ந்த சந்திரமோகன் (21) என்ற வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல பொன்மலைப்பட்டி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த தாமஸ் ஆல்வா எடிசன் 40 என்பவரையும் மதுவிலக்க அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் . அவரிடம் இருந்து 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!